பைக் திருடிய 4 சிறுவர்கள் கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் டவர் பார்க் அருகே நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 4 சிறுவர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அயனாவரத்தை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது. பல இடங்களில் பைக்குகளை திருடி விற்று வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, கெல்லீசில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Tags : boys , 4 boys arrested, stealing bike
× RELATED தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் கைது