×

மூலக்கடை அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம்

பெரம்பூர்: கொடுங்கையூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட  வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். கொடுங்கையூர் மூலக்கடை அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டி வசித்து வந்தார். இதை அகற்ற கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அந்த நபர்  ஆக்கிரமிப்பை அகற்றாமல் இந்த இடம் எனக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மாநகராட்சி அதிகாரிகள் மேல்முறையீடு செய்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில் நேற்று மாநகராட்சி தண்டையார்பேட்டை 4வது மண்டல அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியம் தலைமையில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் பிரகாஷ், மணிகண்டன், அருண் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.பின்னர், அந்த வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு, 2 பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : house ,road ,corner , House built ,mulaikadai roadside
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்