×

அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

பல்லாவரம்: பல்லாவரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (46). அதிமுக பிரமுகர். நேற்று இவர்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, விஜயகுமாருக்கும் சிலருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் விஜயகுமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

* திருவொற்றியூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேவதி (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை நேற்று முன்தினம் கத்தி முனையில் மிரட்டிய இரண்டு சிறுவர்களை  பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
* திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (25) என்பவரின் செல்போனை பறித்து சென்ற திருமங்கலம் அம்பேத்கர் நகர், பாடி குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ெகாள்ளையன் மணிகண்டன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மசாஜ் ெசன்டரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பிரபல புரோக்கர் வினோத்குமார் (எ) சிவகுமார் (28), அவரது நண்பர் அஜித்குமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம் பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் அடைத்தனர்.
* தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம், சிவகாமி நகர், அண்ணா தெருவை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்பவரை முன்விரோத தகராறில் அரிவாளால் சரமாரியாக வெட்டிய அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (20), அவரது தந்தை மணி (39) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் மருத்துவர் தற்கொலை

தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் எஸ்எஸ்எம் நகரை சேர்ந்தவர் மகரஜோதி. செங்கல்பட்டு  அரசு மருத்துவமனையில் எலும்பு பிரிவு மருத்துவராக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி வளர்மதி (36). இவரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக வேலை  செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ரிஷித் (12) என்ற மகனும், ஓமிஷா (4) என்ற மகளும் உள்ளனர். கணவன்,  மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில்  மனமுடைந்த வளர்மதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார்.

Tags : AIADMK figure,sickle
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது