×

கோயம்பேட்டில் கொத்தடிமைகளாக இருந்த 6 வடமாநில சிறுவர்கள் மீட்பு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வேலை செய்து வந்ததாக தகவல் வந்தது. தகவலறிந்து அங்கு சென்ற தொண்டு நிறுவனத்தினர், அவர்களிடம் விசாரணை செய்தபோது, பெற்றோர் வாங்கிய கடனுக்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ. பாரதிதேவியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தலைமையில் சென்ற அதிகாரிகள் கொத்தடிமைகளாக இருந்த 6 சிறுவர்களை மீட்டனர். உரிய முறையில் சம்பளம் கொடுக்காமலும், பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் வேலை வாங்கி வந்ததால் அவர்களது கை மற்றும் கால்களில் ரசாயனம் பட்டு காயங்கள் ஏற்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக, அந்த கம்பெனியின் உரிமையாளரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : boys ,Northland ,Coimbatore , Rescue of 6 Northland boys ,clustered in koyambedu
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு