×

ஊத்தங்கரையில் கைதான இன்ஸ்பெக்டர் லாக்கரில் 190 பவுன் சிக்கியது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன்.  இவர் கடந்த மே மாதம் 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம்,  லாட்டரி சீட்டு விற்பனை வழக்கில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 70  ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன்,  கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து,  ரசாயனம் தடவிய பணத்தை சரவணன்,  இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நடராஜனை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார், நடராஜனின் வங்கி லாக்கரில், நேற்று முன்தினம்  சோதனை செய்தனர். அப்போது, சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பாரத ஸ்டேட்  வங்கி லாக்கரில் இருந்து 150 பவுன் தங்க நகைகள், 14.30 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, சேலம் கூட்டுறவு வங்கியில் 5  லட்சம் ரொக்கம், 40 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 190  பவுன் தங்க நகை மற்றும் 19 லட்சத்து 30 ஆயிரத்தை, பறிமுதல் செய்தனர்.



Tags : Ooty , Uttankarai, Inspector Locker
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்