×

மலிங்கா அபார பந்துவீச்சு இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

லீட்ஸ்: இங்கிலாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி கேப்டன் கேப்டன் கருணரத்னே முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அவருடன் இணைந்து குசால் பெரேரா இன்னிங்சை தொடங்கினார். கருணரத்னே 1 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார். குசால் பெரேரா 2 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, இலங்கை அணி 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், விஷ்வா பெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 59 ரன் சேர்த்தது. பெர்னாண்டோ 49 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து குசால் மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 46 ரன் எடுத்து (68 பந்து, 2 பவுண்டரி) ரஷித் சுழலில் மோர்கன் வசம் பிடிபட்டார். ஜீவன் மெண்டிஸ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.

ஓரளவு தாக்குப்பிடித்த தனஞ்ஜெயா டிசில்வா 29 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த திசாரா பெரேரா 2, இசுரு உடனா 6, மலிங்கா 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன் குவித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 85 ரன் (115 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), நுவன் பிரதீப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3, அடில் ரஷித் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 50 ஓவரில் 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். பேர்ஸ்டோ (0), வின்ஸ் 14 ரன் எடுத்து மலிங்கா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து 6.5 ஓவரில் 26 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

மோர்கன் 21 ரன் (35 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ரூட் 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஸ்டோக்ஸ் 82 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இங்கிலாந்து 47 ஓவரில்  அனை த்து விக்கெட்டுக்ளையும் இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசிகட்டத்தில் அபராமாக பந்துவீசிய மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தியதோடு,  ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Tags : Sri Lanka ,bowling ,Malinga Abera , Sri Lanka beats ,Malinga Abera bowling
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...