×

ராகிங் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : கல்லூரிகளுக்கு அரசு சுற்றறிக்கை

சென்னை: கல்லூரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த 8.9.2018ம் அன்று கவர்னர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அறிவுரை வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதவாறு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்பட வேண்டும். இதனால் கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்: ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். ராகிங் தொடர்பாக புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங்கை தொடர்பாக கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கல்லூரி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Tags : colleges , Immediate action,ragging
× RELATED தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்