×

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் ; டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 62 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 62 இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: ராயபுரம் குற்றப்பிரிவில் இருந்த வசந்தி வடக்கு மண்டலத்திற்கும், கோட்டூர்புரம் சட்டம் ஒழுங்கில் இருந்த அண்ணாதுரை வடக்கு மண்டலத்திற்கும், விருகம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த கோமதி வடக்கு மண்டலத்திற்கும், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த பிரவீன்குமார் ரயில்வேவுக்கும், ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் இருந்த ஜெர்மின் லதா பொருளாதார குற்றப்பிரிவுக்கும், கொருக்குபேட்டை குற்றப்பிரிவில் இருந்த கோமளவல்லி பொருளாதார குற்றப்பிரிவுக்கும், யனைக்கவுனி சட்டம் ஒழுங்கில் இருந்த குணவர்மன் சிபிசிஐடிக்கும் அதேபோல், வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த பாக்கியம்மாள், வில்லிவாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ஜூலியன் கிளாரமாள், புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த லதா, அடையார் குற்றப்பிரிவில் இருந்த மாலினி, அசோக் நகர் குற்றப்பிரிவில் இருந்த கலா, மெரினா குற்றப்பிரிவில் இருந்த கமலா, சேத்துப்பட்டு குற்றப்பிரிவில் இருந்த மகாலட்சுமி, தலைமை செயலகம் காலனியில் இருந்த வளர்மதி, முத்தியால்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த பத்மாவதி, தாம்பரம் குற்றப்பிரிவில் இருந்த ஷாலினி, ஜாம் பஜார் குற்றப்பிரிவில் இருந்த உமா மகேஸ்வரி, டி.பி.சத்திரம் குற்றப்பிரிவில் இருந்த மீனா, ஐஸ்அவுஸ் சட்டம் ஒழுங்கில் இருந்த பால் ஸ்டீபன் ஆகியோர் சிபிசிஐக்கும்,

வேப்பேரி குற்றப்பிரிவில் இருந்த சாந்தி, வடபழனி குற்றப்பிரிவில் இருந்த பாலுசாமி, அபிராமபுரம் குற்றப்பிரிவில் இருந்த பிரபாகர்,  பெரியமேடு குற்றப்பிரிவில் இருந்த சுமதி, ராயப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த மலர்கொடி, திருவான்மியூர் குற்றப்பிரிவில் இருந்த லட்சுமி ஆகியோர் குற்றப்பிரிவுக்கும், விழுப்புரம் தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த சுதா, சென்னை மெட்ரோ சிபிசிஐடியில் இருந்த கண்ணன், மெட்ரோ சிபிசிஐடியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த சித்தார்த் சங்கர் ராய், எஸ்ஐடி- சென்னையில் இருந்த வனிதா பேகம், எஸ்ஐடி- சென்னையில் இருந்த பாலகுமரன், எஸ்ஐடி- சென்னையில் இருந்த சாந்தி தேவி, எஸ்ஐடி- சென்னையில் இருந்த முத்துலட்சுமி, எஸ்ஐடி- சென்னையில் இருந்த பார்வதி, எஸ்ஐடி-சென்னையில் இருந்த நஷிமா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த பழனி கார்த்திகேயன், எஸ்ஐடி- சென்னையில் இருந்த வளர்மதி, தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த செல்வின் சாந்தகுமார், எஸ்ஐடி- சென்னையில் இருந்த செங்குட்டுவன், திருச்சி தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த ஆபிரகாம் கிரேஸ் துரைராஜ், காஞ்சிபுரம் தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த சீதாராமன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த தேவி, வேலூரில் தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த ரவிக்குமார்,

தூத்துக்குடி திருமால் நகர் காவல் நிலையத்தில் இருந்த ரஞ்சித் குமார், திருச்சி ஐபிஆர்இசியில் இருந்த தங்கதுரை, சென்னை சிபிசிஐடியில் இருந்த சுஜாதா, கடலூர் ஐபிஆர்இசியில் இருந்த சுரேஷ், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த சசி, சென்னை சிபிசிஐடியில் இருந்த ஷீலா மேரி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த தெய்வநாயகி, ெசன்னை தேசிய போதை தடுப்பு பிரிவில் இருந்த அமலா ரத்தினம், சிவகங்கை தெற்கு குற்றப்பிரிவில் இருந்த முனியசாமி, சென்னை குற்றப்பிரிவு ஆர்பிஎஸ்யில் இருந்த கயல்விழி, திருநெல்வேலி நகர எஸ்சிஎஸ்யில் இருந்த பிரேமா, தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் இருந்த ராஜாபால், சென்னை தலைமையிட சிபிசிஐடியில் இருந்த ஜோசிம் ஜெரி ஆகியோர் சென்னை மாநகர காவல் துறைக்கு பணியிடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

Tags : inspectors ,state ,Chennai ,DK Rajendran ,DGP , 62 inspectors recruited ,Tamil Nadu including Chennai
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்