×

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ப்பு: வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான இந்தியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான்,  ஆகிய‌வை இடம்பெறுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளின் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்ற பிரதமர் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஜூன் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.


Tags : Modi ,summit ,G20 ,Japan ,State Department , Japan, G-20 Conference, Prime Minister Modi, Foreign Affairs
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...