×

தமிழகத்தில் இதுவரை நிலவி வந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்பம் குறையும்

தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை நிலவி வந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department , Meteorological station, heat, cool down
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...