×

ஏ.என்.32 விமானம் விபத்து சம்பவம்: உயிரிழந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

கோவை: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 13 பேரின் உடல்களுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதையை செலுத்தினார். அதன் பின்பு, வீரர்களின் உடல்கள் அவரர்களது சொந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த  வினோத் ஹரிஹரன் என்ற வீரரின் உடல் விமானம் முலமாக இன்று காலை கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனம் மூலமாக ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

விமானப்படை வீரர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி செலுத்தினர். இதனை தொடர்ந்து சிங்காநல்லூரில் இருக்கக்கூடிய மின் மையானத்திற்கு ராணுவ வீரர்கள் அவரது உடலை எடுத்து சென்றனர். அவரது உடலுக்கு அவர்களது குடும்ப வழக்கத்தின் படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ராணுவ மரியாதையும் செய்யப்பட்டது. இதனையடுத்து ராணுவ மரியாதைப்படி 33 குண்டுகள் முழங்க அவரது உடலானது தகனம் செய்யப்பட்டது. அதேபோன்று,  கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த மற்றொரு வீரரின் உடலும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


Tags : plane crashes ,Tamil , AN 32-plane crash, Tamil Nadu soldier, military honors, cremation
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...