×

சென்னையில் உள்ள அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

சென்னை: பம்மல் நாகல்கேணியில் உள்ள அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் 18 ஊழியர்களுடன் இன்று காலை வழக்கம் போல் வேலை நடைபெற்றது. இந்த சமயத்தில் மதியம் 1 மணி அளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து கடந்த 1 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயானது பெரிய அளவில் இருப்பதால் கிண்டி தீயணைப்பு துறை வீரர்களும், ராஜ்பவனில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதற்கட்ட தகவலில் 2 கோடிக்கு மேலாக பொருட்கள் எரிந்து சேதமனாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பம்மல் சங்கர்நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : fire ,Astor Furniture Company ,Chennai , Esther Furniture Company, Chennai
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...