×

கேரள அரசிடம் தண்ணீரை வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதற்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை : தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய துரைமுருகன், இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு என்று குறிப்பிட்டார். மேலும் ஆந்திராவில் இருந்து தண்ணீரை தமிழகம் பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், கேரள அரசிடம் தண்ணீரை வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதற்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Duramurugan ,government ,Tamil Nadu ,Kerala , Water Famine, Duramurugan, Condemnation, Trains
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...