×

குடிநீர் பஞ்சத்தால் ஒரு குடம் தண்ணீருக்காக திண்டாடும் மக்கள்... தீப்பந்தங்களுடன் விடியவிடிய காத்திருக்கும் அவலம்

ராமநாதபுரம்: குடிநீர் பஞ்சத்தால் ஒரு குடம் தண்ணீருக்காக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே விடிய விடிய காத்து கிடக்கும் அவல நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். ஊரணியில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக தீப்பந்தங்களுடன் இரவிலும் மீனங்குடி மக்கள் காத்துக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஊரணி கிணற்றில் தண்ணீர் இறைத்தால் ஒரு முறைக்கு அரை லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. இதனால் ஒருகுடம் தண்ணீரை பெற அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் இல்லாததால் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும், தொட்டிகளும் வறண்டு காட்சியளிக்கின்றன. தண்ணீர் இறைப்பதற்காக ஊரணி கிணற்றில் வயதான பெண்கள் இறங்கும் சூழ்நிலையில் தடுமாறி விழும் கொடுமையும் நிகழ்கிறது. குடிநீர் தேடுவதே அன்றாட வேலையாக மாறிவிட்டதாக மீனங்குடி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மீனங்குடி சுற்றுவட்டாரத்தில் மனிதர்களுக்கே தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் அங்கு வாழும் காகம், கொக்கு, மற்றும் மயில்களும் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


Tags : pitcher ,famine , Drinking water and people in need
× RELATED அதிகரித்து வரும் கொரோனா தொற்று...