மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய சென்னை சிறுவன்: பிரதமர் மோடி நன்றி கடிதம்

சென்னை: பிரதமர் மோடிக்கு சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் பிரணவ் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் ராஜ்குமார், வித்யா தம்பதியின் மகன் பிரணவ் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட பிரணவ் கடந்த ஆண்டு புத்தக சுமையை குறைக்க உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதற்கு பதில் கிடைத்தது. இந்த நிலையில் 2வது முறையாக பாஜக வெற்றி பெற்றதையடுத்து, மே 24ம் தேதியே பிரணவ் தனது வாழ்த்து கடித்ததாகி அனுப்பி வைத்தார். அதற்கு நன்றி தெரிவித்தும், தமது அரசு மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்தும் பிரதமர் அனுப்பிய கடிதம் கடந்த 18ம் தேதி பிரணவ் கையில் கிடைத்தது. பிரதமர் அனுப்பிய கடித்ததை தனது பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்தார்.

அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி மாணவருக்கு எழுதியுள்ள நன்றிக் கடிதத்தில் எழுதியிருப்பதாவது, “பிரனவ் ராஜ்குமார், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வரலாற்று வெற்றி பெற்றதற்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் 130 கோடி மக்களும் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி அரசியல் ஆகியவை மீது வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் வலிமையான, நிலையான அரசுக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நவீன காலத்துக்கு தகுந்த புத்தாக்கமான, முடிவுகளை எடுத்துள்ளோம். இது போன்ற தகவல் அந்த கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.

Tags : Chennai ,Modi , Greetings, letter, Chennai, boy, PM Modi, thank you letter
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி