×

ஏ.என்.32 விமானம் விபத்து சம்பவம்: உயிரிழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

கோவை: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 13 பேரின் உடல்களுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதையை செலுத்தினார். அதன் பின்பு, வீரர்களின் உடல்கள் அவரர்களது சொந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த வினோத் ஹரிஹரனின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு புறப்பட்டு சென்றது. 13 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், 8 நாட்கள் கழித்து அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் பயணித்த 13 பெரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.

இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இந்திய பாதுகாப்பது படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி 17 நாட்கள் கழித்து 13 பேரின் உடல்களை நேற்று ராணுவ படையினர் மீட்டெடுத்தனர். அதில் 6 பேரின் உடல்களும், மீதமுள்ள 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேரின் உடல்களையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒருவரான கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த  வினோத் ஹரிஹரன் என்ற வீரரின் உடல் விமானம் முலமாக இன்று காலை கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனம் மூலமாக ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது, விமானப்படை வீரர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் 12 மணி அளவில் அவரது உடல் தனகனம் செய்யப்படவுள்ளது. அதேபோன்று,  கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த மற்றொரு வீரரின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags : plane crashes ,Body ,home ,Tamil , AN 32 airplane, accident, Tamil Nadu player, body, tribute
× RELATED மொட்டை மாடியில் செல்போன் பேசியபோது...