×

இதுவரை இல்லாத நிலையில் ஏலக்காய் விலை உயர்வு: கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை

புற்றடி: தொடர்ந்து வரத்து குறைவால் இடுக்கியில் வரலாறு காணாத அளவுக்கு ஏலக்காய் விலை ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது இடுக்கி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 340 ஏக்கர் அளவிலான ஏலக்காய் தோட்டங்களில் 70 சதவிகிதம் அழிந்து விட்டன. இதனையடுத்து புதிதாக பயிர் செய்யப்பட்ட ஏலச்செடிகள் காய்ப்பிற்கு வர 3 ஆண்டுகளாவது ஆகும் என்ற நிலையில் வெள்ளத்திற்கு தப்பிய ஏலக்காய் செடியில் இருந்து மட்டுமே ஏலக்காய் கிடைத்து வருகிறது.

இதனால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ரூபாய்க்கும் சராசரியாக கிலோ 3 ஆயிரத்து 245 ரூபாய்க்கும் ஏலக்காய் ஏலம் போனது.  ஏலக்காய் வரலாற்றிலேயே ரூ.5 ஆயிரம் தொட்டது இதுவே முதல் முறை என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Cardamom, price rise
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...