நடிகர் சங்க தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (ஜூன்-23) நடைபெறவிருந்தது.  மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணியும், பாக்கியராஜ் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சங்க உறுப்பினர்கள் பட்டியலில் பலர் நீக்கப்பட்டது குறித்து வந்த புகார்களை  பரிசீலித்த தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் ஜூன் 23ல் நடக்க இருந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால தடை விதித்து திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அனுமதிக்க கோரியும் விஷால் தரப்பு வக்கீல் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று முறையிட்டார்.அப்போது, அவர் நடிகர் சங்கத்தின் தேர்தலை நிறுத்திவைத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினார்.இதைக்கேட்ட நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியாது. மனு தாக்கல் செய்யுங்கள் நாளை விசாரிக்கிறேன் என்றார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.Tags : Vishal ,High Court , Opposing, Actor's, Election, Vishal,High Court
× RELATED பிரசாத் ஸ்டூடியோ பிரச்னையை சுமூகமாக...