×

மக்களின் நலன் காக்க எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: புதிய எம்.பி.,க்கள் ஒட்டு மொத்த மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்றுக்கொண்ட எம்பிக்கள், மக்களின் முன்னேற்றம், மாநில வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்பு, பொருளாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு போன்ற பலவற்றை மிக முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து ஒட்டு மொத்த மக்கள் நலன் காக்க வேண்டும்.

மேலும், மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்று இருக்கக்கூடிய பா.ஜ அரசும் மற்றும் தமிழக அரசும் மகாத்மாவின் 150வது பிறந்த தின ஆண்டான இந்த ஆண்டில் காந்தியின் அறவழிப் போராட்டம், சத்தியம், அகிம்சை உள்ளிட்ட பல்வேறு தத்துவத்தையும், கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.Tags : MPs ,GK Vasan , protect , people, MPs, vocal, GK Vasan
× RELATED 7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்