×

கோவையை சேர்ந்தவருக்கு ‘நெட்’ தேர்வு எழுத காஷ்மீரில் தேர்வு மையம்

கோவை: நெட் தேர்வு எழுத கோவையை சேர்ந்தவருக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் உதவி பேராசிரியருக்கான ‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில்  ‘நெட்’ தேர்வை நடத்தும் பொறுப்பு ஒருங்கிணைப்பு ஆணையமான என்.டி.ஏ.வி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் பணி மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கான இந்த தேர்வு கணினி  முறையில் நேற்று முதல் வரும் 28ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவையை சேர்ந்த சிலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தேர்வை எழுத கோவையை சேர்ந்த ஜெயபிரகாஷ்  என்பவர் விண்ணப்பித்திருந்தார். தேர்வு எழுத கோவை, திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்திருந்த நிலையில் அவருக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது  ஹால்டிக்கெட்டில் தெரியவந்துள்ளது.

மொழி தெரியாத, முன் அனுபவம் இல்லாத ஒரு நகரத்திற்கு சென்று ‘நெட்’ தேர்வு எழுதுவது கடினமானது என்றும், தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு தேர்வு மையத்தை தமிழகத்திற்குள் மாற்றித்தர வேண்டும் என்றும்  ஜெயபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.வேலூரிலும் குளறுபடி: வேலூர் மாவட்டத்திற்கென வேலூர் கொணவட்டம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு  விண்ணப்பித்திருந்தவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதில் தேர்வு நடைபெறும் இடம், ‘வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே’ என குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தேர்வாளர்கள் கிரீன் சர்க்கிள், புதிய பஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியாமல் பலர் வேதனையடைந்தனர். அதன்பின்னர் ஆட்டோக்கள் மூலம் தேர்வு மையத்திற்கு வந்தனர். அங்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி என்பதால் 9 மணிக்குள் வந்திருக்க வேண்டுமே எனக்கேட்டு தனியார்  செக்யூரிட்டிகள் தேர்வாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் தேர்வாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  இதனால் 10க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இதுகுறித்து ேதர்வாளர்கள் கூறுகையில், ‘சரியான  முகவரியை கூறாமல், தொலைபேசி எண்ணையும் தெரிவிக்காமல் கடும் குளறுபடி செய்துவிட்டனர். இதனால் முகவரியை தேடி வர தாமதமானது. கடந்த முறை 9.15 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். ஆனால் இம்முறை  9.05க்கே நுழைவாயிலை பூட்டிவிட்டனர்’ என தெரிவித்தனர்.

Tags : Goa ,center ,Kashmir , Kovai, net , Examination Center , Kashmir
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு