புழல் சிறை கைதி சாவு

புழல்: சென்னை எம்.ஜி.ஆர்.நகர், அண்ணா மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜார்ஜ் ராஜ் (65). பண மோசடி வழக்கு தொடர்பாக இவரை, வேப்பேரி போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணை பிரிவில் இருந்த ஜார்ஜ் ராஜ் நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் மீண்டும் சிறைக்குள் வாந்தி எடுத்தார். அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜார்ஜ் ராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Death ,prisoner , Death,thorny prisoner
× RELATED ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதி திடீர் மரணம்