×

பூட்டிய வீட்டுக்குள் கள்ளக்காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை

வேளச்சேரி: பூட்டிய வீட்டில் கள்ளக்காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.  பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மனைவி காத்தாயி (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதி மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் பாபு (48). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். காத்தாயிக்கும், பாபுவுக்கும் சொந்த ஊர் விழுப்புரம் என்பதால், சிறு வயதில் இருந்தே பழக்கம் இருந்துள்ளது. இதனால், காத்தாயி துணி துவைப்பதற்காக அடிக்கடி பாபு வீட்டுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் காத்தாயியின் கணவர் ஏழுமலைக்கு தெரியவந்ததால், மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை காத்தாயி, பாபு வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், ஏழுமலை மனைவியை தேடி பாபு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர், கதவை தட்டியுள்ளார். வெகுநேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது காத்தாயி, பாபு இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, கதவை உடைத்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூட்டிய வீட்டில் கள்ளக்காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : thieves ,house , Robbers, lifted and suicide
× RELATED கள்ளக்காதலி வீட்டில் புது மாப்பிள்ளை தற்கொலை