×

ஒரே நாடு, ஒரே தேர்தல் மறைமுகமாக அதிபர் ஆட்சிக்கான ஏற்பாடு கருவிலேயே இதனை அழிக்க வேண்டும்: வீரமணி வேண்டுகோள்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸ்சின் ஒற்றைக் கலாச்சாரமே. மறைமுகமாக அதிபர் ஆட்சிக்கான ஏற்பாடு. மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருவிலேயே இதனை அழிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மத்திய பாஜ அரசு கூறுவது ஆர்.எஸ்.எஸ்சின் ஒற்றைக் கலாச்சாரத்தை செயல்படுத்தும் யுக்தியே. மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த முடிவை மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருவிலேயே இந்த முயற்சியை அழிக்கவேண்டும். பதவியேற்று 20 நாட்களில் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றி மோடி அரசு - தனக்குள்ள பெரும்பான்மை என்ற மிருகப் பலத்தினை நம்பிக்கொண்டும், ஊடகங்கள் தங்கள் வயப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஒத்துழைப்பை நம்பியும், துணிந்து, புயல் காற்று வேகத்தில் செயலாற்றத் தொடங்கிவிட்டது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால், மாநிலங்களின் கல்வி உரிமை, பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பன்மொழிகள் உள்ள பரந்த இந்தியாவினை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் மட்டுமே ஆட்சி புரியும் என்பது போன்று திணிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கொள்கை திட்டங்கள் ஒவ்வொன்றும் அவசர அவசரமாக செயல்பட வேகப்படுத்தப்படுகின்றன.

இதே வரிசையில் அடுத்த பெரிய அறிவிப்பு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஒற்றைக் கலாச்சார- ஒற்றை அதிகாரத் தலைமைக்கு வழிவகுக்கப்படும். இது மறைமுகமாக அதிபர் ஆட்சி முறையை ஏற்படுத்தும் முன்னோட்டம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு - வாக்கு வங்கி உடைய கட்சிகள்தான் வேட்பாளர்களை அப்போது தேர்தலில் நிறுத்த முடியும்.

இது மாநிலக் கட்சிகளுக்கு  எப்படி முடியும்? அதிமுக என்று பெயரில் உள்ள கட்சிகூட தனது வேட்பாளரை நிறுத்த முடியாதே. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் பிரிவே இந்தியா மாநிலங்களின் கூட்டாட்சி என்பதுதான். அப்படி இருக்கையில், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ஆட்சி நிலையாக அமையாவிட்டாலோ, 356, 365 விதிகள்படி நடவடிக்கைகள் வந்தாலோ என்ன நிலை ஏற்படும்?


Tags : country ,election ,Weeramani , One country, one election, indirectly, chancellor rule, destroy, heroic, request
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...