அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஈரான் தகவல்

டெஹ்ரான்:  ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு  அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா  வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் ஈரானுக்கு அது பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான் சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறப்போவதாக அறிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வெடித்தது. சமீபத்தில் ஒமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இதனை ஈரான் மறுத்துவிட்டது.

தனது வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. “ஹர்மோஸ்கான் மாகாணத்தின் வான் எல்லையில் அத்துமீறி பறந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குளோபல் ஹாக் ஆளில்லா உளவு விமானம் ஈரான் விமான படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.


Tags : US ,Iran , US spy plane, shot down, Iran
× RELATED அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி...