×

ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு: நாசா தகவல்

வாஷிங்டன்: வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலா தெரியும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு இரண்டு முறை ‘பிளட் மூன்’ எனப்படும் ரத்த சிவப்பு நிலா தோன்றியது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி  மற்றும் ஜூலை 27ம் தேதி இந்த ‘பிளட் மூன்’ வானத்தில் தோன்றியது. இந்நிலையில் இந்த ஆண்டு வானத்தில் “ஸ்ட்ராபெர்ரி’” நிலா தோன்றும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு வானத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி’ நிலவு தோன்றும். இதை ‘பிளட் மூனு’டன் ஒப்பிட வேண்டாம்.  சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும். மேலும் சில இடங்களில் ‘பிங்க்’ நிறத்தில் நிலவு காணப்படும்.  

பல இடங்களில் நிலவு உதயமாகும்போதும்,  மறையும்போதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சில இடங்களில் நடுவானில் நிலவு இருக்கும்போது வெண்மையாய் காணப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகிலேயே நிலவு நெருங்கி வருவதாலும் ‘ஸ்ட்ராபெர்ரி’ நிறத்தில் ஒளிர்வதாக நாசா தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று இரவு பல்வேறு இடங்களில் ‘ஸ்ட்ராபெர்ரி’ நிலவை மக்கள் கண்டு ரசித்தனர். இன்று இரவும் வானத்தில் அதை காண முடியும்.

Tags : moon ,NASA , Strawberry color, moon, NASA
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...