எம்பிக்களுக்கு மோடி விருந்து

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த எம்பிக்களுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்து அளித்தார். மத்தியில் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து வேற்றுமைகளை மறந்து செயல்பட பிரதமர் மோடி அனைத்து எம்பிக்களுக்கும் விருந்து அளிக்க முடிவு செய்திருந்தார். இதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 750 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி நேற்று டெல்லியில் உள்ள அசோகா 5 நட்சத்திர ஓட்டலில் எம்பிக்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார்.


× RELATED டிடிவி தினகரன், கட்சியை பற்றி...