×

ஜிம்பாப்வேயை வீழ்த்திய நெதர்லாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 1983 முதல் 2015வரை  ஜிம்பாப்வே தொடர்ந்து வருகிறது. இந்த உலககோப்பையில் விளையாடும் வாய்ப்பை மயிரிழையில் ஜிம்பாப்வே தவறவிட்டது. ஆனால் அது குறித்து கவலைப்படாமல் உலக கோப்பையில் விளையாட உள்ள நாடுகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்துடன் விளையாடிய ஜிம்பாப்வே இப்போது நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தலா 2 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.டெவேன்டர் நகரில் முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைப்பெற்றது.

டாஸ் வென்ற நெதர்லாந்து பந்தவீச்சை தேர்வு செய்ய,  ஜிம்பாப்வே களமிறங்கியது. மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஜிம்பாப்வே 47 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பிறகு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. பின்னர் விளையாடிய நெதர்லாந்து 42.5ஓவர்களில்  3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணியின் மேக்ஸ் ஓ’டோத்  87 ரன்கள் விளாசினார்.
Tags : Netherlands ,Zimbabwe , Zimbabwe, The Netherlands
× RELATED நெதர்லாந்திலிருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்