வேன் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 7 சிறுவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

லக்னோ: லக்னோவில் வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பாரபங்கியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு 29 பேர் வேனில் லக்னோவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். லக்னோவில், இந்திரா கால்வாய் அருகே சென்றபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.

இதனைக் கண்ட கிராமத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் உட்பட 22 பேர் மீட்க்கப்பட்டனர். மேலும் 5ல் இருந்து 10 வயதிற்கு உட்பட்ட 7 சிறுவர்கள் கால்வாயில் மூழ்கி மாயமாகினர், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 குழந்தைகளும் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : boys , Van overflowed, submerged, boys, magic, searching work, intensity
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...