மாதம் 3 முறைக்கு மேல் கட்டணம் வங்கியில் பணம் கட்ட திடீர் கட்டுப்பாடு

புதுடெல்லி: வங்கிக் கணக்கில் 3 முறைக்கு மேல் பணம் கட்டுவதற்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் கட்டுவதற்கு கனரா வங்கி திடீர் கட்டுப்பாடு கொண்டுவர உள்ளது. இதன்படி, 50,000 ரூபாய் வரை மாதத்தில் 3 முறை மட்டும் இலவசமாக கணக்கில் பணம் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

அதன்பிறகு மாதத்தில் 4வது முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்ய ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் அதிக பட்சம் 5,000 ரூபாய் வரை இந்த கட்டணம் இருக்கும். இத்துடன் சேர்த்து ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும் என கனரா வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண முறை அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

Tags : bank , 3 times a month, up, charge, bank, money, sudden control
× RELATED இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் திட்டம்