×

ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய இறால் மீன்கள்: மகிழ்ச்சிக்கடலில் மீனவர்கள்

ராமேஸ்வரம்: ஸ்டிரைக் முடிந்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். டன் கணக்கில் இறால் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 15ம் தேதி முதல் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

2 மாதம் கழித்து சென்றதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் வலைகளில் சுமார் 450 டன் இறால் மீன்கள் சிக்கியது. வரத்து அதிகரித்தும், இறால் மீன் விலை குறைந்ததால் மீனவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தொடர்ந்து கடந்த 17ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இறால் மீன்களை கொள்முதல் செய்ய வருவதாக வியாபாரிகள், மீனவர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 1,200க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் மீண்டும் டன் கணக்கில் இறால் மீன்கள் சிக்கியிருந்தன. படகுக்கு அதிகபட்சமாக 250 கிலோ வரை இறால் மீன் கிடைத்துள்ளது என்றும் கடல் நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்களும் கிடைத்துள்ளன என மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : fishermen ,Rameshwaram , Rameswaram, fishermen, trapped and shrimp fishes
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...