×

பொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்

* 100 ஆபாச வீடியோக்கள் சிக்கியது
* போலீஸ் என 4 பேர் கும்பல் அட்டூழியம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை போலீஸ் என கூறி மிரட்டி 4 பேர் கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. இவர்களிடமிருந்து 100 ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரசு கல்லூரியில் பி.எஸ்சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவியை  அப்பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராஜா(45) மற்றும் அவரது நண்பர் வேலுமணி(24) ஆகியோர் தினமும் பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக பேசி வந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவி, பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தாய் கொடுத்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் 2 நாட்களுக்கு முன் வழக்கு பதிந்து ராஜா, வேலுமணி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், ராஜா பல இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து வைத்து, மிரட்டி தனது கரும்பு தோட்டத்தில் உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.  

இதுபற்றிய விவரம் வருமாறு:
கள்ளக்குறிச்சி குள்ளக்கருப்பன் கோயில் பின்புற பகுதியில் கரும்பு தோட்டத்துக்கு பின்புறம், மறைவான பகுதியில் ஏரி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரத்தில் காதல் ஜோடிகள் வந்து செல்வார்கள். அப்போது புதர்களில் செல்போனுடன் மறைந்த கொண்டிருக்கும் ராஜாவின் குமப்ல் காதல் ஜோடிகள் கொஞ்சி பேசுவதையும், தனிமையில் ஈடுபடுவதையும் வீடியோ எடுத்துவிடுவார்கள். பின்னர் அந்த காதல் ஜோடியிடம் சென்று, அடித்து விரட்டிவிடுவார்கள்.

அங்கு தனியாக சிக்கிக்கொள்ளும் கல்லூரி மாணவியிடம் நாங்கள் போலீஸ் என்றும் இன்ஸ்பெக்டரை வரவழைக்கிறோம் எனக்கூறி மிரட்டி, ராஜாவை வரவழைப்பார்கள். அங்கு வரும் ராஜா, நான்தான் இந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மிரட்டும் தொனியில் பேசுவார். உன் பெயர் என்னம்மா? என கேட்டு பெண்களின் முழு முகவரியையும் எழுதிக்கொள்வார். உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லட்டுமா அல்லது விபசார கேஸ் போட்டு உள்ளே தள்ளட்டுமா எனக்கூறி பிளாக் மெயில் செய்வார்.

அதற்கு பயந்துவிடும் இளம்பெண்களை அதே பகுதியில் உள்ள ராஜாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தோட்டத்தின் நடுவில் உள்ள மின்மோட்டார் கொட்டகைக்கு அழைத்து சென்று, ஆசைக்கு இணங்குமாறு கூறி மிரட்டுவார்கள். உடைகளை கழற்றுவதையும் வீடியோ எடுத்து வைத்துக்கொள்வார்கள். பின்னர் நண்பர்களுடன் கூட்டாக உல்லாசமாக இருப்பார்கள். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் பல பெண்கள் சீரழிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை போன்று, பாதிக்கப்பட்ட பெண்கள், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீடியோக்கள் அனைத்தும் உண்மையாஎன விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பைனான்சியர் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை திட்டமிட்டு வலை வீசி தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

‘கோட்டை விட்ட போலீஸ்’
பைனான்சியர் ராஜாவின் நண்பர்கள், கள்ளக்குறிச்சி போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து கொண்டு வாகனங்களில் போலீஸ் என எழுதிவைத்துக்கொண்டு வலம் வந்துள்ளனர். தற்போது ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் பொள்ளாச்சி சம்பவங்களை மிஞ்சும் அளவுக்கு தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதத்துக்கு மேலாக கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் இந்த சம்பவம் குறித்து உளவுத்துறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளூர் போலீசார் கோட்டை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Pollachi ,school ,Sugarcane Estate ,college students , Pollachi, Sugarcane Plantation, Handicrafts, School, College Student
× RELATED பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா...