மருத்துவ பரிசோதனை முடிந்து துரைமுருகன் வீடு திரும்பினார்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் 2 நாட்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நேற்று காலையில் வீடு திரும்பினார் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனுக்கு ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மறுபடியும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து, தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று காலை 10 மணியளவில் நலமுடன் வீடு திரும்பினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>