கோவையில் போலீசாருக்கு மர்ம காய்ச்சல்

கோவை: கோவையை அடுத்த கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4ம் அணி உள்ளது. இங்கு 500 போலீசார், குடியிருப்பு மற்றும் விடுதியில் தங்கி உள்ளனர். கடந்த 3 நாட்களாக 25 போலீசார், வைரஸ் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட போலீசார் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருந்தது. இதனால், அவர்கள் உள் நோயாளிகளாக சிறப்பு வார்டில் அட்மிட் செய்யப்பட்டனர்.


Tags : Goa , Coimbatore, cops, mystery, fever
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மர்ம...