×

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் சரிவு: திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

செம்பட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 24 அடி கொள்ளளவு உள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், புல்லாவெளி, மங்கலம்கொம்பு, பெரும்பாறை உள்ளிட்ட  பகுதிகளில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது.

இந்தாண்டு மழை இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும், காமராஜர் நீர்த்தேக்கத்தில் மைனஸ் 5 அடி ஆழத்திற்கு நீர்மட்டம் சரிந்துவிட்டது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்தாண்டு கடும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக, அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்யவில்லை என்றால், இந்தாண்டு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாயமும் பாதிக்கப்படும்’’ என்றனர்.

Tags : reservoir ,Attur Kamarajar ,Dindigul , Attur, Kamarajar reservoir
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...