×

இறால் மீன்பாடு அதிகம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ஸ்டிரைக் முடிந்து நேற்று கடலுக்கு சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். அதிகளவு இறால் மீன்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடந்த 15ம் தேதி முதல் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். 2 மாதம் கழித்து சென்றதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் வலைகளில் சுமார் 450 டன் இறால் மீன்கள் சிக்கியது. வரத்து அதிகரித்தும், இறால் மீன் விலை குறைந்ததால் மீனவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தொடர்ந்து கடந்த 17ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இறால் மீன்களை கொள்முதல் செய்ய வருவதாக வியாபாரிகள், மீனவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 1,200க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே கடலில் நேற்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு இன்று காலை அவர்கள் கரை திரும்பினர். மீண்டும் அதிக அளவு இறால் மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் கரை திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படகுக்கு அதிகபட்சமாக 250 கிலோ வரை இறால் மீன் கிடைத்துள்ளது என்றும் கடல் நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் கிடைத்துள்ளன என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.



Tags : fishermen ,Rameswaram , Shrimp fish, Rameswaram fishermen, happiness
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...