பா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்

டெல்லி : சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி, ரமேஷ் ஆகிய 4 எம்.பி.க்கள் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி அறிந்து ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெலுங்குதேசம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

× RELATED மாநிலங்களவையில் குடிநீர் பிரச்னையை...