தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரியம்

சென்னை: தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1,816 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு காரணங்களால் குடிநீர் குழாய்களில் விநியோகிக்க முடியாத இடங்களில் தண்ணீர் லாரி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் 4.23 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது.


Tags : Drinking Water Board ,Tamil Nadu , Tamil Nadu, drinking water, drainage board
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?