நாளை சர்வதேச யோகா தினம் : அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடுதல் தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுரைகள் வழங்கியுள்ளது.

மேலும் யோகா தொடர்பாக விளம்பர கவர்ச்சி வாசகம் தயாரித்தல், கட்டுரை எழுதும் போட்டி, விளம்பர தட்டி தயாரித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, யோகாவின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் இசை மற்றும் குழுநடனப் போட்டி மற்றும் கலாச்சாரத்தினை குறித்திடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : schools , International Yoga Day tomorrow, School discipline ,hold yoga-based competitions,all schools
× RELATED குற்றமற்ற இந்தியாவை யோகா மூலம் உருவாக்க முடியும்