ரயில்வே தனியார் மயமாக்கினால் அதானி, அம்பானிக்கு சென்றுவிடும்: எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி

சென்னை: ரயில்வே துறை தனியாருக்கு சென்றால் பல்வேறு பயன்கள் ரத்தாகும் என்று எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மானியம் ரத்தானால் ரயில் டிக்கெட் இருமடங்காக உயர்ந்துவிடும் என்றும், ரயில்வே தனியார் மயமாக்கினால் அதானி, அம்பானிக்கு சென்றுவிடும் எனவும் கூறியுள்ளார். மேலும், ரயிலில் கொண்டு செல்லும் பொருட்களுக்கு 10% முதல் 60% வரை அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : General Secretary ,Ambani ,SRMU , Railways, private, SRMU , kannaiya
× RELATED அக்.27 தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு தேதியை அறிவித்தது ரயில்வே