×

சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது; கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.


Tags : rainfall ,places ,Chennai Tharamani ,Alandur ,Cholinganallur , Chennai, Tharamani, Cholinganallur, Alandur, Rain
× RELATED நெல்லை, புதுக்கோட்டையில் மிதமான மழை