சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதாக இளையராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசின் அனுமதியின்றி பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுப்பதால் தண்ணீ்ர் பஞ்சம் அதிகமாகி வருவதாக மனுவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணி பிரசாத் ஆகியோர் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி குடிநீர் வாரியம் ஆகியோர் நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Madras High Court , Illegal, underground, vehicle, confiscation, Madras High Court
× RELATED சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...