×

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பல தொழில்கள் முடக்கம்...ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவிப்பு...!

சென்னை: தண்ணீர் பிரச்சனையால் தமிழகத்தில் பல தொழில்கள் முடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்ளிட்ட நகர் பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் வீடுகளுக்கே கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, தண்ணீர் இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாததால் கட்டுமான பணிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் ஓட்டல்கள், மேன்சன்கள், பெண்கள்-ஆண்கள் விடுதிகள் மூடப்பட்டு வருகிறது. மக்களின் அத்யாவசிய தேவைக்கே தண்ணீர் கிடைப்பது கடினமாகி வருவதால் தண்ணீரை நம்பி செல்லபடும் வாகன சர்விஸ் சென்டர்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரே அனைத்திற்கும் ஆதாரம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு அனைத்து தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Tamil Nadu, water scarcity, freezing of industries
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...