×

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்து விட்டார்: சங்கரதாஸ் அணியினர் பேட்டி

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த பிறகு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தமிழக ஆளுநர் புரோகித்துடன் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ், குட்டி பத்மினி, பிரசாத், சங்கீதா ஆகியோர் சந்திப்பில் ஈடுபட்டனர். விஷால் அணியினர் நேற்று ஆளுநரை சந்தித்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்ட நிலையில் ஆளுநரை சந்தித்து பேசினர்.   

ஆளுநரை சந்தித்து விட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டதாக பாக்யராஜ் அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஆளுநர் தெரிவித்ததாக கூறியுள்ளனர். மேலும், விஷால் அணியினர் பொய்களை சொல்லி வருவதாகவும், அவர்களது அணிக்குள் ஒற்றுமை இல்லை எனவும் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Governor ,actor ,interview ,Sankarasas , Actor Association election, Governor, Sankaradas team
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...