×

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 28ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் கூடுகிறது. தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை  உடனடியாகக் கூட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னதாக வலியுறுத்தியிருந்தார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக்கணைகளால்  எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, சட்டப்பேரவையைக் கூட்டுவது தாமதமானால் ஆளுநர் அதில் தலையிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாமல்  அரசுத்துறை பணிகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தண்ணீர் பஞ்சம், மேட்டூர் அணை திறப்பு, காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்காதது, நீட் விவகாரம், போன்ற தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வுக்காண வேண்டிய நிலையில், பேரவைக்  கூட்டத்தை தாமதப்படுத்துவது தேவையில்லாத நெருக்கடியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனால், உடனடியாக பேரவைக் கூட்டத்தை கூட்டிட ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க  வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 28ம் தேதி துவங்கவுள்ளது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தப்பின் முதல்நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படும். கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து
 கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை, காவிரியில் நீர் பெருதல், உள்ளாட்சி தேர்தல், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா  தீர்மானம், ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : session ,Tamil Nadu ,Opposition parties , Tamil Nadu assembly session, Opposition parties
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...