×

சேலத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க குளங்களை தூர்வாரும் பொதுமக்கள்: முட்டுக்கட்டை போடும் அரசு

சேலம்: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அரசு எந்த நடவெடிக்கையும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளை மீட்டெடுக்க களமிறங்கிய சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி மக்களின் முயற்சிக்கு அரசு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் தண்னிர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நீர்நிலைகள், குட்டைகளை தூர்வார தொடங்கி விட்டனர். அதன்படி சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் அண்மைக்காலமாக குப்பைமேடாக இருந்த இடத்தை பொதுமக்கள் சீரமைக்க தொடங்கினர். கடந்த காலங்களில் 1 ஏக்கர் நிலப்பரப்பாக இருந்த இடம் பொதுமக்களின் ஆக்கிரமிப்பாலும், அரசின் அலட்சியத்தாலும் குப்பைமேடாக மாறிப்போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தங்களது நீராதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொதுமக்கள் அந்த இடத்தை சீரமைத்து குளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இழந்த குளத்தை மீட்டெடுப்பதற்க்காக பொதுமக்களை ஒன்றிணைத்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் நேரடியாக களத்தில் இறங்கி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தனது சொந்த பணத்தை செலவு செய்தும், வணிகர்களிடம் நன்கொடை பெற்றும் 5 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளனர்.

அதன்படி நூற்றிருக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பால் குப்பைமேடாக காட்சியளித்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக குளமாக மாரி வருகிறது.  கடந்த சில தினங்களாக கனமழை பெய்ய தொடங்கியதால் மூன்று அடிக்கு மேல் தண்ணீரும் தேங்கியது. ஓரிரு நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்து விடலாம் என்றிருந்த நிலையில் கைத்தறி துணை இயக்குனர் கொடுத்த புகாரின் அடைப்படையில், குளத்தை சீரமைக்கும் பணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவேண்டிய  வரும் எனவும் கூறியுள்ளனர்.

Tags : Salem , Salem, Water Famine, Public, Government
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!