×

மக்களவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்வு வழங்கியுள்ளனர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: மக்களவையில் முதன்முறையாக அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது பெருமையானது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதிவியேற்றார். தொடர்ந்து 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை தொடர்ந்து பாஜ சார்பில் புதிய சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலம் கோடாப்பண்டி தொகுதி எம்பி ஓம் பிர்லா (56) அறிவிக்கப்பட்டார். ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இது தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூஜனதா கட்சியும் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன.

இந்த நிலையில் நேற்று சபாநாயகர் தேர்வு மக்களவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வேட்பாளராக யாரையும் நிறுத்தவில்லை. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 13 தீர்மானங்கள் அவையில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஓம் பிர்லா  குரல் ஓட்டு மூலம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் மோடி அழைத்து சென்று அமரவைத்தார்.  தொடர்ந்து பாஜ, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  உரை:

* வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தார்.
* மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
*  மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என்றார்.
* நாட்டில் முதல் முறையாக அதிகளவு பெண் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
* பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாக உள்ளனர்.

* பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ளனர்.
* தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல அனைத்து எம்பிக்களும் பணியாற்ற வேண்டும்.
* நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல புதிய தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
* பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதே நமது நோக்கம் என்றார்.

* இந்தியாவில் கிராமங்களும் நகரங்களும் முன்னேறி வருகின்றன.
* 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.
* நம் வருங்கால தலைமுறைக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்றார்.
* விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது,
* பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் ஒழிப்பு அவசியம்
* குடியரசு தலைவர் கிராம புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள்.
* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் உள்ளது.

* பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
* முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது.
* கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

* உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.
* தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.
* வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

* ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் 5வது சிறந்த நாடாக உள்ளது
* தேச வளர்ச்சியின் பலன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும்
* ரூ.13,000 கோடி மதிப்பில் விவசாயிகள் நலத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது
* ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

* வறட்சி பாதித்த கிராமங்களில் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடத்தப்படும்.
* தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை மத்திய அரசின் மிக முக்கியமான திட்டம்.
* தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய ஜல்சக்தி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
* ஊரகபப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்கள் வாழ்வை வளமாக்கும் வகையிலான அதிகாரங்களை பெற வேண்டும்

* வேளாண்துறையை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.
* விவசாயத்துறையில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த பிரத்யேக குழு அமைக்கப்படும்
* 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.
* மீன் வளர்ப்பு துறையில் இந்தியா விரைவில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
* 9000 பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து துறைகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் 35,000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
* தொலை தூர கிராமங்களில் சுமார் 3 கோடி கான்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முடிவு
* மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

* 2022-க்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக்குவது தான் மிக முக்கிய இலக்கு.
* விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சிறிய நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை தொடங்க செயல்படுத்தப்படும்.

* சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு உழைத்து வருகிறது. 

ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.


ஜனாதிபதி உரை முடிந்ததையடுத்து அவையின் நிகழ்வுகள் நடைபெறும்.நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Ramnath Govind ,session ,parliament , Lok Sabha Election, People's Solution, Parliament Session, President Ramnath Govind, Speech
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...