×

சேலம் அருகே டிப்பர் லாரி மோதி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் டிப்பர் லாரி மோதி மாணவியின் கண்முன்னே ஆசிரியை உயிரிழந்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் ஒரமங்கலம் அடுத்த தாரமங்கலம் பகுதியில் தான் இந்த பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தாரமங்கலத்தை சேர்ந்த அகஸ்தியராணி என்ற பெண் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவியுடன் நேற்றைய தினம் மாலை தாரமங்கலத்தில் இருக்கக்கூடிய கடை வீதி பகுதியில் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாரமங்கலத்தை நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஆசிரியை மீது மோதி உள்ளது. இதன் காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டு அவர் மீது டிப்பர் லாரியானது ஏறியுள்ளது.

இதன் காரணமாக சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது சி.சி.டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த சி.சி.டிவி காட்சியை அடிப்படையாக கொண்டு தான் தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த டிப்பர் லாரி ஓட்டுனர் தப்பி சென்றதாகவும், மேலும் அந்த லாரி நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சி.சி.டிவி காட்சியை அடிப்படையாக கொண்டு தான் லாரியையும், லாரி ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆசிரியை கூட சென்றவர் அவருடைய மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


Tags : CCTV ,tipper lorry collision ,Salem , Salem, tipper truck, collision, editor, casualty, incident, CCTV footage, release
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!