சென்னை: தமிழக ஆளுநர் புரோகித்துடன் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ், குட்டி பத்மினி, பிரசாத், சங்கீதா ஆகியோர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். விஷால் அணியினர் நேற்று ஆளுநரை சந்தித்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்ட நிலையில் ஆளுநரை சந்தித்து பேசி வருகின்றனர்.