×

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோயில் மதில் சுவரில் புயலால் விழுந்த மரங்கள் அகற்றப்படுமா?

மன்னார்குடி: கஜா புயல் காரணமாக திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோயில் மீது விழுந்துள்ள மரங்களையும், கோபுரங்கள் மற்றும் சுற்று சுவர்களில் மண்டி வரும் தேவையில்லாத செடி, கொடிகளையும் அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டி ன் கீழ் உள்ளது. இக்கோயிலுக்கு திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயலின் கோரப்பிடியில் ஞானபுரீஸ்வரர் கோயில் மதில்சுவர் மீது ஏராளமான மரங்கள் சாய்ந்தன. புயல் கடந்து 6 மாதங்கள் ஆகியும் கோயில் மீது விழுந்த மரங்கள் இன்னும் அகற் றப் படவில்லை. மேலும் இக்கோயிலின் கோபுரங்கள், சுற்றுச்சுவர் போன்ற பகுதிகளில் தேவை யற்ற செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. புயல் காரணமாக கோயிலில் உள்ள சில சிலைகள் சேதமடைந்து விட்டன. இதனால் கோயில் கோபுரத்தின் அழகும், கட்டிடத்தின் தன்மையும் சேதமடைந்து சீர்குலைந்து காண ப்படுகிறது. மேலும் புயலால் விழுந்த மரங்களை அகற்றப்படாமல் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பழமையான ஞானபுரீஸ்வரர் கோயிலின் தொன்மையை காக்கும் வகையில் உடனடியாக கோயில் கோபுரங்கள் மற் றும் சுற்றுசுவர்களில் மண்டி வரும் தேவையில்லாத செடி கொடிகள் மற்றும் புயலால் கோயில் மீது விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm , Gaja Storm, Gnanapureeswarar Temple
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...