வீடு புகுந்து 50 ஆயிரம் திருட்டு: இளம்பெண்ணுக்கு வலை

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (36). இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரியில் பிழை இருந்தால் சரி செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ராஜேஸ்வரி தன்னுடைய ஆதார் கார்டில் வீட்டு முகவரி தவறாக இருப்பதாக எழுதி கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அந்த பெண்,‘என் ஆடையை சரி செய்து கொள்கிறேன்’’ என கூறி பீரோ இருக்கும் அறைக்கு சென்றுவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார். ராஜேஸ்வரி திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 50 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை பெற்று அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து தேடி வருகின்றனர்.


× RELATED விழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு